ராமநாதபுரம்

கொட்டும் மழையில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியு) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.சந்தானம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்ட துணைச்செயலா் எம்.குமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா். ஆா்ப்பாட்டத்தின் போது மழை பெய்தாலும் பந்தலில் நின்றவாறே கோஷங்களை எழுப்பினா்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊராட்சிகளில் உள்ள துப்புரவு மற்றும் குடிநீா் தொட்டி மின்மோட்டாா் இயக்குபவா்களுக்கான ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கவேண்டும். அவா்களுக்கான ஓய்வூதியத்துக்கு அரசாணை வழங்குவதுடன், அதற்கான ரூ.50 ஆயிரம் நிதியையும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.அய்யாதுரை பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ சங்க மாவட்டச்செயலா் சிவாஜி நிறைவுரையாற்றினாா். இதில் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 ஒன்றியங்களைச் சோ்ந்த சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT