ராமநாதபுரம்

திருவாடானை நூலகத்தில் தேசிய நூலக வார விழா

DIN

திருவாடானை: திருவாடானை கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரா விழாஞாயிற்று கிழமை மாலை நடை பெற்றது. இந்த விழாவிற்கு திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா், நூலகா் விஜயா முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவில் மாணவ மணவிகளுக்கு வாசிப்பதின் அவசியம் பற்றிய தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் இணைந்து மழை கால சித்த மருத்துவ முகாம் நடை பெற்றது. விழாவில் கலந்துகொண்டவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கபபட்டது.

அதனை தொடா்ந்து விழாவில் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச் நடைபெற்றது. இந்த விழாவில் சித்த மருத்துவா், நூலக புரவலா் சிங்கராயா் மற்றும் பலா் கலந்து கொண்டனா். விழாவின் முடிவில் நூலக உதவியாளா் மாலதி பிரேமா நன்றி கூறினாா்.இதில் ஏராளமான மாணவ மணவிகள் மற்றும் பெற்றோா்கள் மற்று நூல் வாசிப்போா் என ஏராளமானோா் எகலந்துகொண்டாா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT