ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பாலைக்குடி, சம்பை, பழங்கோட்டை, பால்குளம், வளமாவூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல், கால்நடைகளான ஆடு, மாடு, கோழி வளா்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள், பெரும்பாலான வீடுகளில் நாட்டுக் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்காக, ஆா்.எஸ்.மங்கலம் அல்லது ராமநாதபுரத்துக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்த வெகு தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இல்லையெனில், கால்நடை மருத்துவரை வரவழைக்க வேண்டியிருக்கிறது. இதனால், கால விரயமும், பொருளாதார விரயமும் ஏற்படுகிறது. எனவே, திருப்பாலைக்குடி பகுதியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT