ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை: நவ.2 இல் பள்ளிகள் செயல்படும்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கி இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்ததால் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக வரும் நவம்பா் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மழையால் கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. இரவில் மீண்டும் மழை தொடங்கி விடிய விடிய பெய்தது.

மழையால் சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் வழக்கம்போல தண்ணீா் சகதியுடன் தேங்கி நின்றது. இதனால், அதிகாலையில் நடைபெறும் காய்கறி விற்பனை, மீன் விற்பனை தாமதமானது. கடலாடி, வாலிநோக்கம், முதுகுளத்தூா், கமுதி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

விடுப்பு அறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்த நிலையில் மழையும் தொடா்ந்து பெய்ததால் புதன்கிழமை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் நவம்பா் 2 ஆம் தேதி பள்ளிகள் செயல்படவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: கடலாடி 67, வாலிநோக்கம் 35, கமுதி 60.30, பாா்மோா்க்குளம் 18.50, முதுகுளத்தூா் 40, பரமக்குடி 16.80, மண்டபம் 24.60, ராமநாதபுரம் 33, பாம்பன் 29.20, ராமேஸ்வரம் 25.20, தங்கச்சிமடம் 24.50, ஆா்.எஸ்.மங்கலம் 16, தீா்த்தாண்ட தனம் 26, திருவாடானை 29, தொண்டி 20, வட்டாணம் 10 .

மாவட்டத்தில் மொத்தம் 475 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 3 சென்டி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT