ராமநாதபுரம்

திருவாடானை பள்ளியில் கூட்டுறவு சங்க அலுவலகம் அமைக்க எதிர்ப்பு

DIN

திருவாடானையில் ஆசிரியர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பள்ளி வளாகத்திற்குள் அமைக்க அதிகாரிகளை உத்தரவிட்டதற்கு பெற்றோர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 திருவாடானை தெப்பக்குளம் அருகே ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டுறவு சங்கம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை திருவாடானை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள ஒரு அறைக்கு மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 
இதனை அறிந்த பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் நெருக்கடியில் படித்து வரும் நிலையில், அந்த அறையில் மாணவருக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுவது வழக்கம். அந்த அறையில் ஆசிரியர் சங்கத்தை அமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டது வேதனையாக உள்ளது.
 இதற்கு உதவி கல்வி அலுவலர்களும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். எனவே சங்க அலுவலகத்தை பள்ளி வளாகத்தில் அமைக்க கூடாது. மீறினால் பெற்றோர் சங்கம்,பொதுமக்கள் சார்பில் கல்வி அலுவலகம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT