ராமநாதபுரம்

பசும்பொன்னில் நெல் விதைக்கும் கருவி செயல்விளக்கம்

DIN

கமுதி அருகே பசும்பொன்னில் நெல் விதைக்கும் கருவி மூலம் விதைக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 
 கமுதி வட்டார வேளாண்மை அலுவலர் விஜயபாண்டியன் தலைமையில், துணை அலுவலர் சேதுராம, உதவி அலுவலர் இந்துமதி முன்னிலையில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 
நெல் விதைக்கும் கருவி மூலம் நெல் மணிகளை விதைப்பதன் மூலமாக விவசாயிகள்  1 ஏக்கருக்கு செலவிடும் நெல்மணிகளை 3 ஏக்கருக்கு விதைக்க முடியும், மேலும் நெற் பயிர்கள் நல் இடைவெளியுடன், காற்றோட்டத்துடன், அதிக சிம்புகளுடன் முளைப்பாதால் மகசூல் அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். 
மேலும் வேளாண்மை துறை சார்பில் இயந்திரம் மூலம் நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1500 மானியம் வழங்கப்படும் என வட்டார வேளாண்மை அலுவலர் விஜயபாண்டியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT