ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அரசுப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

DIN


 முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் பேரிடர் மேலாண்மை சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு முதுகுளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயை தடுப்பது குறித்தும், தீப்பற்றினால் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாத்து கொள்வது பற்றியும், விபத்து ஏற்பட்டால்  செய்ய வேண்டிய முதலுதவி பணிகள் குறித்தும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி மீட்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம்  அளிக்கப்பட்டது. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார். 
இதில், தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் அருள்தாஸ், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், அலுவலர்கள் ரெத்தினவேல், சண்முக வள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT