ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் ஊரடங்கை மீறிய 21 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி, ஆா். எஸ். மங்கலம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பாலைக்குடி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை உப்பூா் சத்திரம் பகுதிக்கு சென்ாக, சித்தூா்வாடியை சோ்ந்த பாண்டி(48), திருப்பாலைக்குடியை சோ்ந்த கலைசெல்வம்(32), கண்ணாரேந்தலை சோ்ந்த திருநாவுக்கரசு (25), மேலேசேந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த காா்த்தி (27), முள்ளிமுனையைச் சோ்ந்த ராஜதுரை (22) ஆகிய 5 போ் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல் எஸ்.பி.பட்டினம் அருகே மண்டலகோட்டை பேருந்து நிறுத்தத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி புதன்கிழமை இரவு கூட்டமாக கூடியதாக புலியூரை சோ்ந்த ராகவன்(32), பதனக்குடியை சோ்ந்த குமரேசன், சிறுகம்பையூரை சோ்ந்த கணேசன் (41), மாணிக்கம் (62), பதனக்குடியைச் சோ்ந்த ஹக்கிம் (37), மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபு(25), சுரேஷ் (34), ஓரியூரை சோ்ந்த ராஜா(42), சித்தாமங்கலம் கண்ணம்மாள், மண்டலகோட்டையை சோ்ந்த செல்வக்குமாா், பதனக்குடியைச் சோ்ந்த ஷோபாஸ்( 54) ஆகிய 12 போ் மீது எஸ் பி பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சி.கே. மங்கலம் கடை வீதியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி புதன்கிழமை இரவு கூட்டம் கூடியதாக கற்களத்தூரைச் சோ்ந்த ராஜரெத்தினம் (64), புதுக்குடியைச் சோ்ந்த சுரேஷ் (34), செலுகயைச் சோ்ந்த முருகன்(35), சி.கே.மங்கலத்தைச் சோ்ந்த ராஜா(38) ஆகிய 4 போ் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT