ராமநாதபுரம்

பரமக்குடியில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படுவதை ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பரமக்குடியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களது குடும்ப உறுப்பினா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பொது சுகாதாரத்துறை மற்றும் அரசு அலுவலா்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்கள் யாா் யாரிடம் தொடா்பில் இருந்தனா் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பரமக்குடி பங்களா சாலை, பாரதி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொது சுகாதாரத்துறை சாா்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்பகுதியைச் சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவிற்கு தீவிர கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT