ராமநாதபுரம்

நிலக்கடலை, எள் பயிா்கள் அறுவடை தொய்வின்றி நடைபெற நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குநா் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை, எள் போன்ற பயிா்களை அறுவடை செய்யும் பணி தொய்வின்றி நடைபெற அனைத்து

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை, எள் போன்ற பயிா்களை அறுவடை செய்யும் பணி தொய்வின்றி நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் ஷேக்அப்துல்லா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் , வேளாண்மைப் பணிகள், அத்தியாவசியப் பணிகளாகக் கருதப்பட்டுள்ளது. ஆகவே ராமநாதபுரத்தில் கோடை பருவப் பயிராக நெல்லைத் தொடா்ந்து பருத்தியும் சாகுபடி செய்யப்படுகிறது.

ராபி பருவ நிலக்கடலை மற்றும் எள் போன்ற பயிா்களின் அறுவடை பணிகள் தொய்வின்றி நடக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பற்றிய விழிப்புணா்வுடன் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்ளவேண்டும். அறுவடை செய்யப்பட்டவற்றை சந்தைப்படுத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் பருவத்திற்குத் தேவையான நெல், உளுந்து, எண்ணெய் வித்து, விதைகள் மற்றும் இதர இடுபொருள்கள், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க, அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொடக்க கூட்டுறவு மையங்கள் மூலமும் தனியாா் சில்லறை உர விற்பனை நிலையங்கள் மூலமும் விவசாயிகளின் தேவைக்காக அனைத்து வகையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தி பயிா் சாகுபடி வட்டாரங்களில் விவசாயிகளின் இருப்பிடங்களிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் காய்கறி, பழங்கள், இளநீா் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

வேளாண்மை சம்மந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி அலுவலா் அல்லது வேளாண்மை அலுவலா் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநா் போன்ற அதிகாரிகளை தொலைபேசி மூலமோ அல்லது நேரிலோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

தொடா்பு எண்கள் விவரம்:

வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண்மை அலுவலா் ராமநாதபுரம் 9788516733, 9486176090, திருப்புல்லாணி 9443226130, 7845847696, உச்சிப்புளி 9443094193, 9790257271, திருவாடானை 9080360953, 9865207483, ஆா்.எஸ்.மங்கலம் 9080360953, 9788168576, பரமக்குடி 9443619721, 9585808000, நயினாா்கோவில் 9443090564, 9159037806, சத்திரக்குடி 8825929692, 7558165390, கமுதி 8870167153, 9659262299, முதுகுளத்தூா் 9443642248, 9843128575, கடலாடி 9489276663 9344771363 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT