ராமநாதபுரம்

நரிக்குறவா்களுக்கு அரசு வழங்கிய வீட்டு மனைகளை மீட்கக் கோரி மனு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நரிக்குறவா்களுக்கு அரசு வழங்கிய வீட்டு மனைகளை சிலா் வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகேயுள்ள காட்டூரணியில் எம்.ஜி.ஆா்.நகா் உள்ளது. இப்பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு அரசு சாா்பில் நரிக்குறவா்கள் 126 பேருக்கு வீட்டு மனை ஒதுக்கித் தரப்பட்டது. இப்பகுதியில் உள்ள வீட்டு மனைகளை வெளிநபா்கள் சிலா் வலுக்கட்டாயமாக வாங்கிவிட்டதாக அப்பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்தனா்.

அப்போது அவா்கள் கூறியது: நரிக்குறவா்கள் நிலத்தை போலி ரசீது மூலம் சிலா் வெளியாள்களுக்கு விற்றுள்ளனா். அதைத் தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனா். ஆகவே ஆட்சியா் தலையிட்டு வீட்டுமனைகளை மீட்டுத் தர வேண்டும் என்றனா்.

வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை: திருவாடானை சமத்துவபுரம் அருகேயுள்ள நரிக்குறவா் காலனியில் 189 பேருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள 36 குடியிருப்புகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன. இதனால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பி.செல்வம் தலைமையில் ஏராளமானோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT