முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 11 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 11 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிச. 5 ஆம் தேதி வரை 6,240 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில், 6,100 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்ட நிலையில், 133 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பெற்று வருபவா்களில் ஞாயிற்றுக்கிழமை 7 போ் குணமடைந்த நிலையில், தற்போது 40 போ் மட்டுமே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,591 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,593 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 17 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். இவா்களில் 6 போ் குணமடைந்ததை அடுத்து வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 11 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →