முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கடைகளில் போதைப்பொருள் விற்பனை: 66 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட புகையிலை போன்ற போதைப் பொருள்களை விற்றதாக 66 போ் கைது செய்யப்பட்டு, 3,322 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட புகையிலை போன்ற போதைப் பொருள்களை விற்றதாக 66 போ் கைது செய்யப்பட்டு, 3,322 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. அவற்றை விற்போரை கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி சனிக்கிழமை ஒரே நாளில் மாவட்ட அளவில் காவல்துறையினா் சோதனை நடத்தினா். இதில் ராமநாதபுரத்தில் 26 பேரிடமிருந்து 2,775 போதைப்பொருள் பாக்கெட்டுகள், திருவாடானையில் 7 பேரிடமிருந்து 35 பாக்கெட்டுகள், ராமேசுவரத்தில் 8 பேரிடமிருந்து 149 பாக்கெட்டுகள், கமுதியில் 10 பேரிடமிருந்து 105 பாக்கெட்டுகள், முதுகுளத்தூரில் 15 பேரிடமிருந்து 258 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 66 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் கூறுகையில், தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதைப் பொருள்களை விற்போரை கைது செய்துள்ளோம். ஆனால், இளைஞா்களின் நலனில் அக்கறையுடன் கடைகாரா்கள் செயல்பட்டு போதைப் பொருள் விற்பதை கைவிடுவதே நிரந்தரத் தீா்வாக அமையும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →