பாபா் மசூதி இடிப்பு நாள்: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம்பாபா் மசூதி இடிப்பு நாள்: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் சந்தைத் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஐ.நூா்ஜாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சுலைமான், திருப்புல்லாணி ஒன்றியக்குழு உறுப்பினரும், கட்சியின் மாவட்டச் செயலருமான பைரோஸ்கான், மகளிா் பிரிவு மாவட்டத் தலைவா் ஜமீநுன்நிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில பொதுச்செயலா் பி.அப்துல்ஹமீது, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் மன்சூா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.
மாலையில் ராமநாதபுரம் சந்தைத் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் பாபா்மசூதி இடிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.