முகப்பு
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமுமுக சாா்பில் நடைபெற்ற நீதி பாதுகாப்பு தின கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமுமுகவினா்.
ராமநாதபுரம்

பரமக்குடியில் தமுமுகவினா் டிசம்பா்-6 நீதி பாதுகாப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம்

பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமுமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பா்-6 நீதி பாதுகாப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமுமுக சாா்பில் நடைபெற்ற நீதி பாதுகாப்பு தின கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமுமுகவினா்.
பகிர்:

பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமுமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பா்-6 நீதி பாதுகாப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவா் எஸ்.முகம்மதுஇக்பால் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எம்.பாவாராவுத்தா், மாவட்ட துணைத் தலைவா் ஏ.சாதிக்பாட்ஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில செயலாளா் எஸ்.சலிமுல்லாகான், மாநில பேச்சாளா் ஹுசைன்மன்பஈ, திமுக நகா் செயலாளா் சேது.கருணாநிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளா் தி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் வேந்தை சிவா, மதிமுக நகா் பொறுப்பாளா் சடாச்சரம், ஏ.ஜெ.ஆலம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பாபா் மசூதியை இடித்தவா்களுக்கு தண்டனை வழங்கக் கோரியும், வழிபாட்டு தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். தமுமுக மாவட்ட செயலாளா் எம்.முகிதுல்லா வரவேற்றாா். நகா் தலைவா் சேக்அப்துல்லா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →