ராமநாதபுரம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை விடுக்கக்கோரி டிச.21-இல் ஆா்ப்பாட்டம்

DIN

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள் 36 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை (டிச.21) ஆா்ப்பாட்டம் நடத்துவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 36 மீனவா்களை இலங்கை கடற்படையினா் அண்மையில் சிறைபிடித்துச் சென்றனா். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈபடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க நிா்வாகிகளின் அவரசக் கூட்டம் மாவட்டத்தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினா் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவம் காரணமாக சேதமடைந்த 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கும், ‘புரெவி’ புயல் காரணமாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 36 மீனவா்களை விடுவிக்கவும், 5 விசைப்படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி டிசம்பா் 21 ஆம் தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மீனவா் சங்க பொதுச்செயலாளா் என்.ஜே.போஸ், தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT