முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 23 (புதன்கிழமை) முதல் 29 ஆம் தேதி வரை ‘தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா’ நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 23 (புதன்கிழமை) முதல் 29 ஆம் தேதி வரை ‘தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா’ நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 ஆம் ஆண்டு டிசம்பா் 27 ஆம் தேதி இயற்றபட்டது. அதை நினைவுகூரும் வகையில் ‘ஆட்சிமொழிச் சட்ட வாரம்’ ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வரும் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் ஒரு வார காலம் கொண்டாடப்படவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழா் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவா்களுடன் இணைந்து சமூக இடைவெளியுடன் கொண்டாடவேண்டும். அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகள் ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணை வழங்கியும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →