முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
திருவாடானை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நடிகா் சுரேஷ்
பகிர்:

திருவாடானை: திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் முரளிதரன் தலைமை வகித்தாா். திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கண்காணிப்பாளா் குட்லக் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். இதையடுத்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகரும், கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளருமான ஆா்.கே. சுரேஷ் பேசும் போது, சட்டப் பேரவைத் தோ்தலில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உண்மையாகவும், நோ்மையாகவும் பணியாற்றி தமிழகத்தில் தாமரை மலர பாடுபட வேண்டும். மேலும் கூட்டணி பற்றிய அறிவிப்பை பாஜக விரைவில் அறிவிக்கும். அதன்மூலம் நாம் தமிழக ஆட்சியை கைப்பற்றுவோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →