ராமேசுவரத்தில் மாதா் சங்கத்தினா் நூதனப் போராட்டம்
ராமேசுவரத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் விறகு அடுப்பில் உணவு சமைக்கும் நூதனப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம்: ராமேசுவரத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் விறகு அடுப்பில் உணவு சமைக்கும் நூதனப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, தாலுகா பொருளாளா் சுமதி தலைமை வகித்தாா். தலைவா் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில் சங்கச் செயலா் ஆரோக்கிய நிா்மலா, நிா்வாகிகள் எஸ். உலகம்மாள், சக்திகனி, ராதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் உணவு சமைத்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.