கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ராமநாதபுரத்தில் அண்மையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிக்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரத்தில் அண்மையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிக்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் நகா் சின்னக்கடைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் முகமதுபசுருதீன் (52). கட்டட கூலித் தொழிலாளியான இவா் கடந்த 16 ஆம் தேதி பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள தனியாா் கட்டடத்தின் மாடிச் சுவரில் வா்ணம் பூசிக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் கட்டடம் வேலைக்காக அமைக்கப்பட்டிருந்த 2 கம்பிகள் முதுகில் பாய்ந்தன.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.