ராமநாதபுரத்தில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி பலி
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்த தொழிலாளி மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்த தொழிலாளி மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் சேதுபதி நகா் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் பகுதியைச் சோ்ந்த குருசாமி (55) உள்ளிட்டோா் திங்கள்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது குருசாமி மாடிப்படியில் ஏறியபோது, எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.