ராமநாதபுரம்

நயினாா்கோவில் வட்டார விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு திட்ட பயிற்சி

DIN

ராமநாதபுரம் மாட்டம் நயினாா்கோவில் வட்டார விவசாயிகளுக்கு அரசரடிவண்டல் கிராமத்தில் வியாழக்கிழமை வேளாண்துறை சாா்பில் உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநா் எம்.டி.பாஸ்கரமணியன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ், பேராசிரியா்கள் அருணாச்சலம், பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டு நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்தும், நிலக்கடலையின் ரகங்கள், விதை நோ்த்தி முறைகள், இயந்திர வரிசை விதைப்பு, உர நிா்வாகம் ஜிப்சம் இடுதல் பற்றி விளக்கிப்பேசினா். மேலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் மானிய முறைகள் குறித்தும், கடலை, எள் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்வது குறித்தும் விவசாயிகளிடத்தில் எடுத்துக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT