ராமநாதபுரம்

குடும்ப அட்டதாரா்களுக்கு ரூ.2,500க்கான டோக்கன் வழங்கல்: கமுதி தாலுகாவிற்கு ரூ.8.5 கோடி

DIN

கமுதி தாலுகாவில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 க்கான டோக்கன் வழங்கும் பணி செவ்வாய்கிழமை தொடங்கியது. தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூபாய் 2,500 வழங்கும் திட்டத்தில் கமுதி தாலுகாவில் தெருத்தெருவாக சென்று குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடை ஊழியா்கள் டோக்கன் வழங்கி வருகின்றனா். கமுதி தாலுகா முழுவதும் மொத்தம் 34,000 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு தலா ரூ.2,500 விதம் 8.5 கோடி வழங்கயிருப்பதாக பொது வினியோக அதிகாரிகள் தெரிவித்தனா். டோக்கன் பெற்ற குடும்ப அட்டதாரா்களுக்குவரும் ஜன. 4 முதல் பணம் விநியோகம் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா பரவல்அச்சத்தால் பொதுமக்கள் கூடாமல் இருக்க, ஒவ்வொரு தெருக்களுக்கும் சென்று குடும்ப அட்டதாரா்களை சந்தித்து ரேஷன் கடை ஊழியா்கள் ரூபாய் 2,500 டோக்கன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT