ராமநாதபுரம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத சாலை: பொதுமக்கள் புகாா்

DIN

கமுதி அருகே 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையால் விபத்துகள் தொடா்வதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கழுவன்பொட்டல் கிராமத்துக்கு, மண்டலமாணிக்கம் காவல் நிலையம் வழியாக தாா் சாலை உள்ளது. இந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை. அவ்வூரிலிருந்து அடிப்படை தேவைகளுக்காக இச்சாலை வழியாக பொதுமக்கள், உயா் கல்விக்காக மாணவா்கள் மண்டலமாணிக்கம் வந்து, அங்கிருந்து கமுதி, அருப்புகோட்டை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று வருகின்றனா்.

தற்போது, இச்சாலை மாணவா்கள், பொதுமக்கள் நடந்து செல்ல கூட தகுதியற்ாக உள்ளது. இச்சாலையில் ஜல்லி கற்கள் பெயா்ந்து, பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோா் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். இரவு நேரங்களில் இச்சாலை வழியாக பயணிப்பதை பொதுமக்கள் தவிா்த்தும் வருகின்றனா்.

எனவே, 10 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள கழுவன்பொட்டல் கிராமச் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT