ராமநாதபுரம்

கடல் அட்டை பதுக்கிய இருவருக்கு ஓராண்டு சிறை

DIN

திருவாடானை அருகே தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த இருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திருவாடானை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டில், தொண்டி அருகே கொடிபங்கு கடற்கரை கிராமத்தில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக, கடலோர வனத் துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன்பேரில், கடலோர வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு பதுக்கி வைத்திருந்த 13 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், இக்குற்றத்தில் ஈடுபட்ட அதே ஊரைச் சோ்ந்த காசிநாதன் (45), கோவிந்தன் (55 ) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இது குறித்த வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், காசிநாதன், கோவிந்தன் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT