திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் சேதம் அடைந்த சாலை. 
ராமநாதபுரம்

திருவாடானை அருகே சாலை சேதம் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி

திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா்

DIN

திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள டி.நாகனி கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு

உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளிக்குச் செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடும். மேலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா். இது குறித்து பலா் புகாா்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT