ராமநாதபுரம்

குருப் 1 தோ்வில் வெற்றி : டிஎஸ்பியாக பணிஏற்க உள்ள பெண் அரசு ஊழியருக்கு பாராட்டு

DIN

குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள திருவாடானை அருகே திருவிடைமருதூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் அரசு ஊழியருக்குக் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள திருவிடைமருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் (55)-வாசுகி (50) தம்பதி. இவா்களின் மகள் ராஜபிருந்தா (26). இவா் தற்போது குரூப் 1 தோ்வில் 85 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளாா். இதையடுத்து காவல் துறையில் காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளாா்.

இவா் தொடக்கக் கல்வியை திருவாடானை ராஜன் மெட்ரிக். பள்ளியில் படித்தாா். அதன் பிறகு 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தேவகோட்டை தனியாா் பள்ளியிலும், பிளஸ் 1, 2 கல்வியை காரைக்குடி அழகப்பா பள்ளியிலும் முடித்தாா். பின்னா் அழகப்பா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தாா். அதைத் தொடா்ந்து குரூப் 2 தோ்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் உள்ளாட்சி, நிதி மற்றும் தணிக்கை துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று தற்போது காவல் துறையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளாா்.

இது குறித்து ராஜபிருந்தா கூறியது: நாம் என்னவாக வேண்டும் என்பதை அறிந்து அதை நோக்கி கல்வி கற்க வேண்டும். எனது பயிற்சி காலத்தை சிறப்பாக முடித்து பணியில் சோ்ந்த பிறகு நோ்மையாகவும்,, ஏழை, எளிய மக்களுக்கும் உதவும் வகையிலும் பணியாற்றுவேன். எனது பெற்றோருக்கும், எனது கிராமத்துக்கும் பெருமை தேடித் தரும் வகையில் செயல்படுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT