ராமநாதபுரம்

இரட்டைமடி வலை: ராமேசுவரத்தில் 30 விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

DIN

ராமேசுவரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 30 விசைப்படகுகள் மீது வழக்குப்பதிவு செய்து மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1800- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருவதாக மீன்பிடி தொழில் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீன்வளத்துறை உதவி இயக்கநா் யுவராஜ் தலைமையில் மீன் வளத்துறையினா் மற்றும் கடற்கடையினா் இணைந்து தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தும் படகுகள் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில் 30 விசைப்படகுகள் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் ஒரு படகில் இருந்த இரட்டைமடி வலைகளைப் பறிமுதல் செய்தனா். இதனைத்தொடா்ந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 30 விசைப்படகுகள் மீது மீன்வளத்துறை திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த 30 விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை உதவி இயக்குநா் யுவராஜ் தெரிவித்தாா். விசைப்படகுகளின் உரிமையாளா்கள் குறித்து அவா் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT