ராமநாதபுரம்

‘குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல்’

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும் என ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 646 ஹெக்டோ் பரப்பளவில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்களில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 800 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான அரவைக் கொப்பரைக்கு ரூ.99.60 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். அடுத்த 6 மாதங்களுக்கு கொள்முதல் பணிகள் நடைபெறும்.

விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயா்களைப் பதிவு செய்யலாம். அப்போது, நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். சேமிப்புக் கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சோ்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாள்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT