ராமநாதபுரம்

மீன்பிடிக்கத் தடை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முழு பொது முடக்கம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்று விட்டு ஞாயிற்றுகிழமை கரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் ஞாயிற்றுகிழமை முழு பொது முடக்கம் என்பதால் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT