திருவாடானையில் திமுகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
திருவாடானை, ஆர்எஸ் மங்கலம் தொண்டி உள்ளிட்ட பல்வேரு பகுதிகளில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
திருவாடானை, ஆர்எஸ் மங்கலம் தொண்டி உள்ளிட்ட பல்வேரு பகுதிகளில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர் மு.சரவணன் தலைமை வகித்தார். இதில் வழக்குறிஞர் கார்த்திகேயன், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே போல் சி.கே.மங்களத்தில் ஊராட்சி மற்றும் கிளைக்கழக செயலாளர்கள் வீட்டின் முன் மின் கட்டண கொள்ளைக்கு எதிராக அதிமுக அரசை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி செயலாளர் சுரேந்தர் கிளை செயலாளர்கள் முனியப்பன், துரைராஜ், நடராஜன், குனசேகரன், காளிதாஸ், இளங்கோவன், சண்முகவேல், தெட்சினாமூர்த்தி, அழகுமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல் ஆர் எஸ் மங்கலத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து R.S.மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகாபிரபு வீட்டின் முன்பு கழகத் தோழர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் பிச்சங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து மற்றும் தும்படைக்காகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மோகன் மற்றும் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.