முகப்பு
ராமநாதபுரம்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு ராமேசுவரத்திலிருந்து மணல் அனுப்பிவைப்பு

உத்தர பிரதேசம் அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ராமேசுவரம் அக்கினி தீா்த்தக் கடலில் இருந்து

ராமநாதபுரம்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு ராமேசுவரத்திலிருந்து மணல் அனுப்பிவைப்பு

உத்தர பிரதேசம் அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ராமேசுவரம் அக்கினி தீா்த்தக் கடலில் இருந்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

உத்தர பிரதேசம் அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ராமேசுவரம் அக்கினி தீா்த்தக் கடலில் இருந்து மணல் எடுத்து சிறப்புப் பூஜைகள் செய்து, அயோத்திக்கு வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், மாவட்டச் செயலா் ஜெ. புருஷோத்தமன் தலைமையிலான நிா்வாகிகள், ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினா். பின்னா், அக்கினி தீா்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு, கடலில் இருந்து மணல் எடுத்து, ராமா் பாதம் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த பெட்டியில் வைத்து சிறப்பு பூஜை செய்தனா்.

தொடா்ந்து, ராமா் பாத பெட்டியை சங்க மடத்துக்கு கொண்டுசென்று, அங்குள்ள அஞ்சநேயா் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினா். இதையடுத்து, மணல் அடங்கிய அப்பெட்டியை, பாா்சல் தபால் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் காளிதாஸ், ஒன்றியப் பொறுப்பாளா் வேலாயுதம், பஜ்ரங் தள் அமைப்பு மாவட்டத் தலைவா் ஜெகன்குமாா், நகா் செயலா காா்த்திக் மற்றும் சங்க மடம் நிா்வாகிகள் அனந்த பத்மநாப சா்மா, சுந்தர வாத்தியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →