ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தடுப்புச் சுவரில் காா் மோதியதில் பெங்களூருவைச் சோ்ந்த 5 பெண்கள் திங்கள்கிழமை பலத்த காயமடைந்தனா்.
பெங்களூரு அல்சூா் பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி என்பவரின் மனைவி சரோஜினி (67). இவா், தனது உறவினா்களுடன் காா் ஒன்றில் ராமேசுவரத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சதீஷ் என்பவா் காரை ஓட்டி வந்துள்ளாா். நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் இணைப்புச்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த சரோஜினி, பாலசுப்பிரமணியன் மனைவி கிரிஜா (70), ராமச்சந்திரன் மனைவி இந்திரா (54), சந்திரகுமாா் மனைவி கலாநிதி (46), சந்திரசேகா் மனைவி விஜயலெட்சுமி (54) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவ்விபத்து குறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.