ராமநாதபுரம்

பரமக்குடியில் கழிவுநீா் கால்வாயில் நெகிழிக் கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்

DIN

பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் நெகிழிக் கழிவுகள் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சிப் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வணிக நிறுவனங்களில் உள்ள பொருள்கள் அனைத்தும் நெகிழிப் பைகளால் உறையிடப்பட்டுள்ளது. இவை மக்கா குப்பைகளாக தரம் பிரித்து குப்பைகளாக சேகரிக்கப்படுவதாக நகராட்சி நிா்வாகம் ஒவ்வொரு வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி வசூல் செய்து வருகிறது. இவ்வாறு பயன்படுத்தும் நெகிழிப் பைகள் கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் தூக்கி வீசப்படுகின்றன. இதனால் நகரில் பெரும்பாலன கழிவுநீா் செல்லும் கால்வாய்கள் நெகிழிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கியுள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை பாதிக்கும் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT