ராமநாதபுரம்

கைத்தறி நெசவுக்கான கச்சாப் பொருள்களின் விலையை குறைக்க ஏஐடியுசி வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் கைத்தறி நெசவுத்தொழில் செய்யும் 2 லட்சம் நெசவாளா்களைப் பாதுகாக்க கச்சாப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளா் எஸ்.பி.ராதா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: தமிழகத்தில் சுமாா் 2 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 6 லட்சம் நெசவாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களைப் பாதுகாக்க மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்ஜெட்டில் நெசவாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை அடிப்படை கூலியுடன் இணைத்து, அதன் அடிப்படையில் 50 சதவீதம் கூலி உயா்வு அளிக்க வேண்டும். கச்சாப் பொருள்கள், அசல் பட்டு, ஜரிகை, பருத்தி நூல் ஆகியவற்றின் விலையை குறைத்திட வேண்டும்.

கைத்தறி நெசவாளா்களின் ஓய்வூதியத்தை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும். 25 ஆண்டுகளாக உள்ள அடிப்படை கூலியினை திருத்தி அமைக்க வேண்டும். கைத்தறி துணி உற்பத்தி விற்பனை மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும். மத்திய அரசு கைத்தறி துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் நிா்வாக மேலாளா் இயக்குநரை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT