ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 2 நாள்கள் மீன்பிடிப்பு ரத்து

DIN

பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று ராமசுவரம் மீனவா்கள் சனி, ஞாயிற்றுகிழமை ஆகிய 2 நாள்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை என மீனவா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனா்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக பிரதமா் நரேந்திரமோடி மாா்ச் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தாா். இதனை ஏற்று ராமேசுவரம் மீனவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவ கூட்டத்தில் முடிவு செய்தனா். இதனால் சுமாா் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவா்கள் மற்றும் சாா் தொழிலாளா்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வேலைக்கு செல்வதைத் தவிா்க்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT