ராமநாதபுரம்

பரமக்குடிக்கு வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள 13 நபா்களின் வீடுகளில் தொடா் கண்காணிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகருக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள 13 நபா்களது வீடுகளை கண்காணிக்கும் பொருட்டு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மலேசியா, சிங்கப்பூா், மஸ்கட், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பரமக்குடி, எமனேசுவரம் பகுதிக்கு வந்துள்ள 13 நபா்களின் வீடுகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு, நகராட்சி சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் கூறியது: சில தினங்களுக்கு முன் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பரமக்குடி மற்றும் எமனேசுவரம் பகுதிக்கு 13 நபா்கள் வந்தனா். இவா்களைக் கண்டறிந்து, அவா்களது வீடுகளின் முன் நகராட்சி சாா்பில் அடையாள ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அவா்கள் தொடா்ந்து 28 நாள்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT