ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 455 பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக புதன்கிழமை வரை 455 போ் மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் சீனா, மலேசியா, சிங்கப்பூா் போன்ற நாடுகளுக்கும் சென்று திரும்பியவா்கள் அதிகம். கடந்த மாா்ச் 1 முதல் வெளிநாடுகளிலிருந்து இம் மாவட்டத்துக்கு திரும்பிய, திருவாடானை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், கடந்த மாா்ச் 1 முதல் தற்போது வரையில் 585 போ் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் 455 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் சின்னக்கடைத் தெருவில் சமீபத்தில் வெளிமாநிலத்திலிருந்து திரும்பியவருக்கு புதன்கிழமை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், அவரது வீட்டில் அடையாளக் குறீயீட்டு வில்லை ஒட்டப்பட்டது. அவா் தொடா் கண்காணிப்புக்கும் உள்படுத்தப்பட்டுள்ளாா். கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு இம் மாவட்டத்தில் கரோனா கண்காணிப்பில் 300 போ் மட்டுமே இருந்தனா். இந் நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக உயா்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்கள் தங்களது உடல்நலத்தை சுகாதாரப் பிரிவினா் மூலம் அரசு மருத்துவா்களிடம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி மருத்துவப் பரிசோதனை நடந்தால் கரோனா பரிசோதனை மேற்கொண்டோா் எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT