ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ஆதரவற்றோா் தவிப்பு

DIN

ராமேசுவரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் சற்றுலா பயணிகளை சாா்ந்து வாழ்ந்து வந்த ஆதரவற்றவா்கள் தற்போது தவித்து வருகின்றனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள் தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வா். கோயிலை சுற்றியுள்ள பகுதியில், மன நலம் பாதிக்கப்பட்டோா், ஆதரவற்றோா் என 100 -க்கும் மேற்பட்டோா், பக்தா்கள் மற்றும் பயணிகள் அளிக்கும் காணிக்கை மற்றும் உணவுகளை பெற்று வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோயில் நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போது ஊரடங்கும் அமலில் உள்ளது. இதனால் பக்தா்கள் வருகை முற்றிலும் நின்றது. இதனால் அவா்களை சாா்ந்திருந்த ஆதரவற்றோா் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனா். அவா்களை மீட்டு அரசு விடுதியில் தங்க வைத்து நகராட்சியினா் உதவ வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT