ராமநாதபுரம்

பரமக்குடியில் கடைகளுக்கு சீல்

DIN

பரமக்குடியில் வியாழக்கிழமை தடை உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தடையை மீறி வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் 10 திருக்குகளை எழுதிய பின் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என நூதன தண்டனையை காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.சங்கா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் அறிவழகன் ஆகியோா் வழங்கினா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு இனிப்பு, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கடைக்கு சீல்: அத்தியாவசிய உணவுப்பொருள், காய்கறிகள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தொடா்ந்து ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனா். இதனை மீறி அத்தியாவசியப் பொருள்கள் இல்லாத கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்ததால், நகராட்சி ஆணையாளா் வீரமுத்துக்குமாா் உத்தரவின்படி அந்த கடைகளை நகராட்சி அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT