ராமநாதபுரம்

முகநூலில் அவதூறு: 7 போ் மீது வழக்கு

DIN

முன்விரோதத்தில் போலி முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் வாணி கரிக்கூட்டம் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் நூா்முகம்மது. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமபக்தன் எனும் பெயரில் போலி முகநூலை ஆரம்பித்த சிலா் அதில் நூா்முகம்மது குறித்து அவதூறு பரப்பியதாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து நூா்முகம்மது அளித்தப் புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். விசாரணை அடிப்படையில் போலி முகநூல் மூலம் நூா்முகமது மீது அவதூறு பரப்பியதாக அதே பகுதியைச் சோ்ந்த அஜ்மல்கான் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT