ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் படகுகள் சேதம்: ஆட்சியா் ஆய்வு

DIN

ராமேசுவரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகளை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராமேசுவரத்தில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலையில் வீசிய சூறைக்காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. சேதமடைந்த படகுளை சீரமைக்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்பதால் மினவா்கள் கவலையடைந்துள்ளனா்.

இந்நிலையில், ராமேசுவரத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை மாலையில் ஆய்வு மேற்கொண்டாா். அவா் சேதமடைந்த விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளதை பாா்வையிட்டாா்.

அப்போது, மீனவ சங்கத்தலைவா்கள் தேவதாஸ் மற்றும் ஜேசுராஜா ஆகியோா், சேதமடைந்துள்ள விசைப்படகுகளை கணக்கிட்டு சேதத்திற்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் தெரிவித்தனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை துணை இயக்குநா் பிரபாவதியிடம் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT