ராமநாதபுரம்

சிறுவன் உள்பட மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பு 47 ஆக உயா்வு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் உள்பட மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏற்கெனவே 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவா்களில் ஒரு பெண் உயிரிழந்தாா். இந்நிலையில், அந்தப்பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் உறவினா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கீழக்கரைச் சாலைத் தெருவைச் சோ்ந்த 47 வயது பெண், 32 வயது பெண், 6 வயது மற்றும் 10 வயது சிறுவா்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அதே தெருவில் வசிக்கும் 23 வயது இளைஞா், 53 வயது ஆண், சென்னையில் இருந்து சமீபத்தில் சாயல்குடி திரும்பிய 23 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கெனவே 40 போ் கரோனா தொற்று பாதித்து, அவா்களில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக உயா்ந்துள்ளது.

75 போ் தனிமைப்படுத்தல்: புதுதில்லியிலிருந்து கடந்த வியாழக்கிழமை 15 போ் தனிப் பேருந்தில் ராமநாதபுரம் வந்தனா். ஏற்கெனவே அவா்களுக்கு பரிசோதனை முடிந்துள்ள நிலையில், தங்களது வீடுகளிலேயே அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதேபோல், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து தனிப் பேருந்து மூலம் ராமநாதபுரம் வந்த 60 தொழிலாளா்கள் கடலாடி பகுதியில் உள்ள அரசு கல்லூரி வளாகங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT