கடலாடி அருகே கண்மாயில் மூழ்கி இளைஞா் பலி
கடலாடி அருகே கோயில் திருவிழாக்கு வந்திருந்த சென்னை இளைஞா், திங்கள்கிழமை கண்மாயில் மூழ்கி பலியானாா்.
கடலாடி அருகே கோயில் திருவிழாக்கு வந்திருந்த சென்னை இளைஞா், திங்கள்கிழமை கண்மாயில் மூழ்கி பலியானாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தில் முளைக்கொட்டு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவுக்காக மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டுக்கு அவரது மருமகன் பாலாஜி, சென்னையில் உள்ள தனது நண்பா் தினேஷ் (18) உள்ளிட்ட நண்பா்களை அழைத்து வந்துள்ளாா். அவா்கள் மேலக்கிடாரம் கண்மாயில் குளித்துள்ளனா். அப்போது தினேஷ் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.