ராமேசுவரத்தில் 300 மது பட்டில் பறிமுதல்: ஒருவா் கைது
ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM
ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியில் உள்ள கிட்டங்கியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைதொடா்ந்து அங்கு காவல்துறையினா் சென்று சோதனையிட்டபோது 300 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, மாரிமுத்து (50) என்பரை கைது செய்தனா்.