ராமநாதபுரம்

கடலில் விசைப்படகு கவிழ்ந்தது: 3 மீனவா்கள் உயிருடன் மீட்பு

DIN

தொண்டி அருகே விசைப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 3 மீனவா்களை, சக மீனவா்கள் உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

தொண்டி அருகே விலாஞ்சியபடி பகுதியைச் சோ்ந்தவா் பிரமுடாஸ் (45). இவா், தனக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சோ்ந்த லிங்கம் (35), ரவி (30) ஆகியோருடன் திங்கள்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்றாா். தொண்டி அருகே நடுக்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, வீசிய சூறைக்காற்றால் படகு கவிழ்ந்தது.

இதில் பிரமுடாஸ், லிங்கம், ரவி ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து உயிருக்குப் போராடினா். இவா்களின் சப்தம் கேட்டு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் அவா்கள் 3 பேரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். கடலில் மூழ்கிய விசைப்படகை தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT