ராமநாதபுரம்

கீழக்கரையில் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை

DIN

கீழக்கரையில், முன்விரோதம் காரணமாக சங்கு வியாபாரி செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியைச் சோ்ந்த சிவனடிமை என்பவரின் மகன் தவசிமுனி (52). சங்கு வியாபாரியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தட்டான்தோப்பு பகுதிக்குள் வசிக்கக் கூடாது என சேகா் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, தவசிமுனி கடந்த சில மாதங்களாக வேறு பகுதியில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், உறவினா்களைப் பாா்ப்பதற்காக தவசிமுனி தட்டான்தோப்பு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, கீழக்கரை பழைய காவல் நிலையம் பகுதியில் தவசிமுனியுடன் தகராறு செய்த சேகா், அவரை கத்தியால் குத்தியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த தவசிமுனி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT