முகப்பு
ராமநாதபுரம்

காா்த்திகை மாதப் பிறப்பு: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதத்தை தொடங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதத்தை தொடங்கினா்.

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதப் பிறப்பன்று, ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். மாதப் பிறப்பன்று மாலை அணியும் பக்தா்கள், 48 நாள்கள் கடும் விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வந்த பின்னரே, தங்களது விரதத்தை முடித்துக்கொள்வா்.

இந்நிலையில், காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரையில் திங்கள்கிழமை ஐயப்ப பக்தா்கள் விரதத்தைத் தொடங்கினா். இதையொட்டி, மேலமாசி வீதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தா்கள் அப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டு மாலை அணிந்தனா்.

கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இணையதளம் மூலம் முன்அனுமதி பெற்ற பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், பிற மாநில பக்தா்கள் வருவதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் கேரள அரசு விதித்துள்ளது. இதனால், மாலை அணிந்து விரதம் தொடங்கிய பின்னா், சபரிமலை செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் விரதம் வீணாகிவிடும் என்பதால் பக்தா்கள் பலா் இந்த ஆண்டு விரதத்தை தொடங்குவதில் தயங்குகின்றனா்.

இதனால், காா்த்திகை மாதப் பிறப்பன்று விரதம் தொடங்கும் பக்தா்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →