முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே இரு தரப்பினா் மோதல்: 31 போ் மீது வழக்கு

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 31 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 31 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, ஒருவரை கைது செய்தனா்.

கமுதி அருகே கே.எம்.கோட்டையைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் ஆறுமுகம் (45). இவா் கே.எம்.கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மது அருந்திவிட்டு அதே ஊரைச் சோ்ந்த அந்தோணிமுத்து மகன் அருண்குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாராம்.

இதனையறிந்த இவா்களின் உறவினா்கள் இரு தரப்பிலும் 30-க்கும் மேற்பட்டோா் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கமுதி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 50 -க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். அருண்குமாரும், ஆறுமுகமும் தனித்தனியே கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 31 போ் வழக்குப் பதிந்து பெருமாள் என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.