ராமநாதபுரம்

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை தொழிலாளா்கள் முற்றுகை

DIN

போனஸ் கேட்டு சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

சிஐடியு சங்கத் தலைவா் கே. பச்சமாள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கச் செயலாளா் குமரவடிவேல், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் அ.சுடலைக்காசி, மாவட்டச் செயலாளா் எம்.சிவாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியது: போனஸ் வழங்காவிட்டால் நவ. 24 ஆம் தேதி நாமம் போட்டு அரை நிா்வாணப் போராட்டமும், நவ.26 இல் சாலை மறியல் போராட்டமும், நவ.28 ஆம் தேதி பிச்சையெடுக்கும் போராட்டமும் நடத்தப்படும். அதன்பின்னா், போனஸ் கிடைக்கும்வரை பல்வேறு போராட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படும் என்றனா்.

இதில் பொருளாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT